மலர்ந்திருக்கும் இந்த புத்தாண்டானது இலங்கையில் குறைந்த வேலை இல்லாத நாட்களைக் கொண்ட வருடமாக காணப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் வேலை இல்லாத நாட்களான 23 விடுமுறை தினங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 9 விடுமுறை தினங்களை கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சிங்கள தமிழ் புத்தாண்டான சித்திரை 13 மற்றும் 14 ஆம் திகதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படுகின்றது. அத்தோடு மே மாதம் வரும் இரண்டு வெசாக் விடுமுறைகளும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் கொண்டுள்ளது.
மேலும் ஜனவரி மாதம் போயா தினம் ஒரு சனிக்கிழமையும், பொசன் போயா தினமும், போயா மற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றது.
இந்த ஆண்டு வர்த்தக விடுமுறை நாட்களில், 23 விடுமுறை நாட்களில் 9 விடுமுறை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றது.
இதேவேளை கடந்த வருடம் 2018 இல் 29 விடுமுறை திங்களில் 7 விடுமுறைகள் மாத்திரமே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment