சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஒரே ஒரு ரி20 போட்டிக்கான நியூசிலாந்து குழாம் இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான தலைவராக நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவ்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கு கொள்ளும் கேன் வில்லியம்சனுக்கு 2019 உலக்கிண்ணத்திற்கு முன்னதாக சற்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சனுடன் ட்ரெண்ட் போல்ட் மற்றும் கொலின் டி க்ரேன்ஹோம் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் குழாமுக்கு மீள் வருகை தந்து முதல் போட்டியில் அபாரமாக ஆடிய ஜேம்ஸ் நீசம் மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோரும் ரி20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை சத்திர சிகிச்சை காரணமாக ஓய்வளிக்கப்பட்டிருந்த சுழல் பந்து வீச்சாளர் மிச்சல் சான்ட்னரும் ரி20 குழாமிற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 போட்டி எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து குழாம்
டிம் சவ்தி (தலைவர்)
லோகி பேர்குசன்
மார்ட்டின் கப்டில்
ஸ்கொட் க்க்லெய்ன்
கொலின் மொன்றோ
ஜிம்மி நீசம்
ஹென்றி நிக்கோல்ஸ்
க்ளென் பிலிப்ஸ்
செத்ரான்ஸ்
மிச்சல் சான்ட்னர்
டிம் செய்பர்ட்
இஷ் சோதி
ரோஸ் டெய்லர்
No comments:
Post a Comment