போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்றைய வழக்கு விசாரணையின் போது விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது ஓய்வு பெற்ற முன்னாள் பதிவாளர் நாயகம் சுமதிபால ஹெட்டியாரச்சியிடம் சாட்சி விசாரணை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment