சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான ஒரு தொகை ஒலிவ் எண்ணெய் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புறக்கோட்டை யோர்க் வீதி பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் பதியப்பட்டிருந்த தயாரிப்பு மற்றும் காலாவதி திகதிகள் அகற்றப்பட்டு புதிய திகதிகளை உள்ளடக்கி அவற்றை மீண்டும் சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட காலாவதியான ஒலிவ் எண்ணெய்யை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment