பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் இந்த யோசனை அடங்கிய பிரேரணையை கையளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து நாட்கள் அவசியம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 29 ம் திகதி இந்த யோசனை மீது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த யோசனையில் ரவி கருணாநாயக்க, கவிந்த ஜயவர்தன, சதுர சேனாரத்ன, நாலக்க பிரசாத் கொலொன்னே, நவீன் திஸாநாயக்க மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரேரணையை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment