இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்கள் மஹிந்தவுடையதா? – பிரதமர் அலுவலகம் விளக்கம்! - News View

About Us

About Us

Breaking

Monday, November 19, 2018

இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்கள் மஹிந்தவுடையதா? – பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன. 

குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதன் மூலம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு குண்டு துளைக்காத லேண்ட் ரோவர் செண்டினல் வாகனங்களும் பிரித்தானியாவில் இருந்து நேரடி விமானத்தின் ஊடாக பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment