வவுனியா – ஓமந்தை விளாத்திகுளம் பகுதியில் வீடொன்றிலிருந்து பிறந்த குழந்தை புதைக்கபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ள நிலையில், குழந்தை உயிரிழந்து பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment