மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளியின் புதிய தலைவராக ஏ.எல்.அலியார் ஹாஜியார் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளியின் புதிய தலைவராக ஏ.எல்.அலியார் ஹாஜியார் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலின் புதிய தலைவராக ஏ.எல். அலியார் ஹாஜியார் நேற்று (31) நிருவாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பள்ளிவாசலுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு கடந்த வருடம் 2017.08.13ஆம் திகதி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் அதிகாரிகள், முக்கியஸ்தர்களின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதில் 21 பேர் புதிய நிருவாகிகளாக தெரிவாகியிருந்தனர்.

புதிய நிருவாகத் தெரிவில் பள்ளிவாசலுக்கு தலைவராக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அன்று தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த பள்ளிவாசலின் தலைவர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படுதல் எனும் தீர்மானத்துக்கு அமைய நேற்று (31.10.2018) முதல் பள்ளிவாயலின் புதிய தலைவராக ஏ.எல்.அலியார் ஹாஜியார் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment