என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் - ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் - ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த

உண்மையாகவே இந்த பேரம் பேசும் செயல்களுக்கு எனக்கு நேரமில்லை, அதனால் என் பெயரை இந்த அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது தரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகளை மகிந்த தரப்பினர் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இலஞ்சம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினரிற்கு யோசித ராஜபக்ச தலைமை தாங்குவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் போதே யோஷித்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நான் தற்போது இடம்பெற்று வரும் ரக்பி தொடரிலேயே எனது முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளேன். உண்மையாகவே இந்த பேரம் பேசும் செயல்களுக்கு எனக்கு நேரமில்லை, அதனால் என் பெயரை இந்த அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment