முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மான் இறைச்சியுடன் கைதாகிய இரண்டு நபர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பினை சேர்ந்த இரண்டு நபர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் மான் இறைச்சியினை விற்பனைக்கு எடுத்து சென்றவேளை நேற்று (31) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று (01) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவருக்கும் 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து ஆட்பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment