அப்புத்தளை, கல்கந்த பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட யுவதி உள்ளிட்ட 58 பேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
முகநூல் வலையத்தினூடாக மேற்படி விடுதிக்கு முகநூல் நண்பர்களை வரவழைத்து அசீஸ், கஞ்சா, மற்றும் லேகியம் போன்ற போதைப் பொருட்களை பாவனைக்கு கொடுத்து களியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க மேற்படி விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார், களியாட்டித்தில் ஈடுபட்டிருந்த யுவதி உட்பட 58 பேரை கைது செய்தனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 585 மில்லிகிராம் எடையுள்ள அசீஸ் போதைவஸ்தும், 7030 மில்லிகிராம் எடையுள்ள கஞ்சா உள்ளிட்ட போதை மாத்திரைகளும், 17 கஞ்சா தூள் கலக்கப்பட்ட சிகடெ்டுக்களையும் ஒரு தொகை கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் பொலிஸார் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment