கட்சி மாறுவதற்காக தமக்கு பணம் வழங்கும் முயற்சி இடம்பெற்றதாக பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

கட்சி மாறுவதற்காக தமக்கு பணம் வழங்கும் முயற்சி இடம்பெற்றதாக பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் இன்று (02) நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்க வந்த சந்தர்ப்பத்தில், கட்சி மாறுவதற்காக தமக்கு பணம் வழங்கும் முயற்சி இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை பரிமாற்றுவது தொடர்பில் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்படுகின்றது. 500 கோடி ரூபா அல்லது 2.8 மில்லியன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. சாட்சியங்களுடனேயே நான் கூறுகின்றேன். விடயங்களை முன்வைக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.

எனினும், மத்திய வங்கி மூலம் அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையிட்ட பணத்தைப் பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்கள் 3 அல்லது 4 மில்லியன் டொலர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சோமசிங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment