நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் தயாரான நிலையிலும் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும், பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.
No comments:
Post a Comment