தாயின் மாமியார் ஒருவரினால் கிணற்றில் போடப்பட்ட 8 மாத குழந்தை - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

தாயின் மாமியார் ஒருவரினால் கிணற்றில் போடப்பட்ட 8 மாத குழந்தை

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வௌியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

​பின்னர் குழந்தை நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தையின் தாயின் மாமியார் ஒருவரினால் குழந்தை கிணற்றில் போடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment