வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கத்தை இன்றையதினம் (03) குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது சைனா ஹாபர் நிறுவனத்திடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டதாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
குறித்த முறைப்பாடு சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment