இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து குழாத்தினர் இன்று (01) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
5 சர்வதேச ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரொன்றில் இரு அணி வீரர்களும் விளையாடவுள்ளனர். இவ்வருடத்தில் இலங்கை அணி விளையாடவுள்ள இறுதி கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
ஜொஸ் பட்லர், ஆதில் ரஷீட், மொயின் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியன் ப்லன்கட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் இன்று நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
ஏனைய இங்கிலாந்து வீரர்கள் இன்று மாலை 3.45 மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளனர். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சகல போட்டிகளும் சிரச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment