சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் “மனித உரிமைகளுக்காக முன்னின்ற சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிப்போம்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா புதிய நகர சபை மண்டபத்தில் முதியோர்களை கௌரவிக்கும் கௌரவிப்பு நிகழ்வு 05.10.2018 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, நுவரெலியா நகரத்திலிருந்து 1000க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்களது உரிமைகளை கோரி சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாக நுவரெலியா புதிய நகர சபை மண்டபம் வரை சென்றனர்.
அதனைத்தொடர்ந்து கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.புஷ்பகுமார, பெரண்டினா நிறுவனத்தின் பணிப்பளார் ஜெகத் கொடகந்த, பிரதேச செயலக அதிகாரிகள், அரச சார்பற்ற அதிகாரிகள், பெருந்தோட்டங்களின் முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முதியோர்களுக்கான வைத்திய ஆலோசனைகள் வைத்திய அதிகாரி நவாஸ் ஜெப்ரி மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
க.கிஷாந்தன்
No comments:
Post a Comment