தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங் பக்-இற்கு (Lee Myung-bak) 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சீயோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி மீது இலஞ்சம், மோசடி மற்றும் வேறு சில குற்றங்களும் சுமத்தப்பட்டிருந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றை அவர் மறுத்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லீ மியுங் பக் (Lee Myung-bak) தென் கொரியாவின் ஜனாதிபதியாக சேவையாற்றியிருந்தார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
இதனிடையே, மற்றுமொரு தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை-யும் (Park Geun-hye), ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு 33 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment