வவுனியா வர்த்தகர்களுக்கு வரி அறவீடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

வவுனியா வர்த்தகர்களுக்கு வரி அறவீடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

வவுனியா வர்த்தகர்களுக்கு வரி அறவீடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வு வர்த்தகர் சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் வர்த்தகப் பிரமுகர்களின் நன்மை கருதி தமிழ் மொழியில் நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி வரி செலுத்துவது பொறுப்பல்ல அது ஒரு சமூகக்கடமை எனும் தொனிப்பொருளில் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தின் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழான கொள்கைகள் தொடர்பாகவும் வர்த்தகர்களின் கேள்விகள், சந்தேகங்கள் தொடர்பாகவும் கருத்தரங்கில் வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சுடன் இணைந்து நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனுராதபுரம் அலுவலகத்தின் ஆணையாளர் திரு. எம்.கே. சரத் அபேரத்தின, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடமையாற்றும் எம். கணேசராசா, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஏ.எம். நபீல், யாழ்ப்பாணம் இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ். சுஜன், மன்னார் வர்த்தகர்கள் சார்பாக கிறிஸ்தோப்பர், வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதான கணக்காளர், வரி ஆலோசணைக் கணக்காளர்கள், வரி செலுத்துநர்கள் சார்பாக திரு. எஸ். ஞானசம்பந்தர், எஸ். ஆனந்தராசா ஆகியோர் கலந்துகொண்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வவுனியாவிலுள்ள வர்த்தகப் பிரமுகர்கள், கணக்காளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment