இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி இஸ்ரேலில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அனுமதிப்பத்திரம் இன்றி நபர்களை வௌிநாட்டுக்கு அனுப்புவதற்காக சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், இதன்போது பணம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்பந்த பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கம்பொளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment