குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் தனக்கு எதிராக குருநாகல் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் தனக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதும் குருநாகல் மேல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தன் பின்னர் தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு வேண்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த போதும் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்தாக மனுதாரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதமானது என உத்தரவு வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டி மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதுடன் குறித்த மனு விசாரணை முடிவடையும் வரையில் தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் வேண்டியுள்ளார்.
No comments:
Post a Comment