நாட்டின் தெற்கு, தென்மேல் மற்றும் மேற்கு பகுதியிலுள்ள கடல் பிரதேசங்களில், நாளை (03) காலை 6.00 மணி வரை கடற்றொழிலில் ஈடுபடுவோர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளி மண்டலவியல் திணைக்களத்தின், இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு மத்திய நிலையத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (02) நண்பகல் 12.00 மணியிலிருந்து நாளை (03) காலை 6.00 மணி வரை குறித்த அறிவித்தல் செயற்பாட்டில் இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மாத்தறையில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்கரை பிரதேசத்தில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோமீட்டர் வரை திடீரென உயர்வடைவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் குறித்த கடல் பிரதேசம் உடனடியாக கொந்தளிப்படையலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீன்பிடி மற்றும் கடல் தொழிலில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில், நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள கடல் பிரதேசத்தில் செயற்பாட்டுமிக்க முகில் தொகுதிகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இம்முகில் கூட்டங்கள் எதிர்வரும் ஒரு சில மணித்தியாலங்களுக்கு செயற்பாடு மிக்கதாக காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment