திருட்டில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

திருட்டில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது

பாணந்துறை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடிய சம்பவம் தொடர்பில் தாயொருவரும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட மகனிடமிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க மற்றும் வௌ்ளி ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

களுத்துறை மாவட்ட குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகநபர் 2100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரால் திருடப்பட்ட தங்க நகைகளை அவரது தாய் அடகு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இரண்டு சந்தேகநபர்களும் இன்று (03) பணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment