கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது

கொழும்பு கோட்டடையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டது. எனினும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரம் ஹட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 08.30மணி அளவில் தடம்புரண்டுள்ளதாக ஹட்டன் புகையிர கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் மலையக புகையிரத சேவை பாதிக்கபடவில்லையென ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

தடம் புரண்ட புகையிரதத்தின் திருத்தப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்தி அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சதீஸ்குமார்

No comments:

Post a Comment