பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்ட காலமாக காரணங்கள் கூறப்படாது வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்
இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும் நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களது வழக்குகளை தொடுத்தோ அல்லது புணர்வாழ்வு அழித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இன்று (02) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நீதிமன்றுக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்தும் கொட்டகைக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
எஸ். தவசீலன்
No comments:
Post a Comment