இயற்பியலுக்கான நோபல் பரிசு - பெண் விஞ்ஞானி உட்பட மூவருக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

இயற்பியலுக்கான நோபல் பரிசு - பெண் விஞ்ஞானி உட்பட மூவருக்கு அறிவிப்பு

2018-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று (02) அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் தட்டிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment