ரயில் பயணங்களுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்காக ரயில்வே திணைக்களத்தினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் 011 2432128 மற்றும் 071 1332716 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் பயணங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கட்டண அதிகரிப்பு தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment