ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பத்தான, வலிமபொத்தானை பகுதியைச் சேர்ந்த இராணுவப் படையில் சிவில் ஊழியராக கடமையாற்றி வரும் எம்.ரத்னசிறி விக்கிரமநாயக்க (48 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது சிறுவயதில் வளர்ப்புக்காக எடுத்த பிள்ளை இரண்டாவது திருமண மனைவியுடன் இச்சிறுமி வளர்ந்து வந்தபோது மனைவி கடைக்கு சென்ற வேளை 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட வருடைய மனைவி சிறுவர் மற்றும் பெண்கள் அமைப்பிற்கு வழங்கிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போது இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை அனுராதபுர போதனா வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் ஹொரவ்பத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment