பிரதியமைச்சர் மெளலானாவினால் மட்டு. மாவட்ட வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆறு கோடி நிதியொதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

பிரதியமைச்சர் மெளலானாவினால் மட்டு. மாவட்ட வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆறு கோடி நிதியொதுக்கீடு

தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து அவர்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு 60 மில்லியன் (6 கோடி) ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

மேற்படி நிதியொதுக்கீடு தொடர்பான கடிதம் இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாழ்வாதார செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை உடனடியாக மேற்கொள்வதோடு இவ்வாண்டு நவம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த செயற்றிட்டத்தை முழுமைப்படுத்துமாறும், அது தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக முன் வைத்து பணிகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக அலிசாஹிர் மௌலானா அவர்கள் பதவியேற்றுக் கொண்டதன் பிற்பாடு பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த செயற்றிட்டம் மக்கள் நேரடியாக அனுகூலங்களை அடைந்து தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்வடையச் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பாரிய செயற்றிட்டமாக இது அமைந்துள்ளது.

குறித்த செயற்றிட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் முன் வைக்கப்பட்ட செயற்றிட்ட முன்மொழிவிற்கு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு வாழ்வாதாரத் திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றக் காரணமான பிரதியமைச்சர் மெளலானாவுக்கு மக்கள் சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

ஏறாவூர் முஹம்மது அஸ்மி

No comments:

Post a Comment