மியன்மாரின் அரசியல் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனேடிய பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்துள்ளது.
மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு கனடா அரசாங்கத்தினால் ஆங் சான் சூகி உள்ளிட்ட 6 பேருக்கு கெளரவக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர், இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியன்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக 1991இல் ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment