எந்தக் கட்சியாக இருந்தாலும் எமது மக்களின் நலன் வேண்டி பணி செய்ய வேண்டும் - முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

எந்தக் கட்சியாக இருந்தாலும் எமது மக்களின் நலன் வேண்டி பணி செய்ய வேண்டும் - முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி

எந்த அரசியல் வாதியாகவோ எந்தக் கட்சியாகவோ இருந்தாலும் சரி நாங்கள் அனைவரும் எமது மக்களை மக்களாகவே நோக்க வேண்டும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உண்டு. என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது இன்று பாருங்கள் எமது பாமரமக்களை பிழையான வழிகளில் வழிநடத்துவதற்கு அரசியல் இலாபத்திற்காக முற்படுகின்றனர். இதற்காக எமது மக்கள் விலைபோகக் கூடாது எப்போதும் நாங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி தேர்தல் காலங்கள் வரும் போதும் எமது கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகள் பற்றி மக்களிடையே முன்வைத்து எமது பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியும் ஆனால் தற்போது எமக்குள்ள பணி கஷ்டப்பட்ட துன்பப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய வேண்டும்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் குறிப்பாக எங்களது படுவான்கரை பிதேச மக்கள் தங்களின் வாழ்வாதாரம் உடமைகள் அனைத்தையும் இழந்து வாழ்ந்தவர்கள் தற்போது இந்த கொடிய யுத்தத்திலிருந்த எமது மக்கள் விடுதலையாகி தற்போது ஓரளவு அவர்களின் அடிப்படை பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருகின்றனர் இதற்கேல்லாம் காரணம் இந்த நல்லாட்சி அரசின் முன்னெடுப்புக்களேயே சாரும்.

இன்று எமது நாட்டில் உள்ள பல பிரதேசங்கள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. அதே போன்று எமது மட்டக்களப்பிலுள்ள அனைத்து பிரதேசங்களையும் மக்களின் நன்மை கருதி அபிவிருத்தி செய்வதற்கு கட்சி பேதங்கள் இன்றி நாம் அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யமுடியும். எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment