யாழ்ப்பாணத்தில் நிலமெஹ்வர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

யாழ்ப்பாணத்தில் நிலமெஹ்வர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று

வடக்கில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கம் நோக்கில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துவல ஆகியோர் யாழ்ப்பாணம் செல்கிறார்கள். 

அமைச்சர்கள் இரண்டு பேரும் 53 அமைச்சுக்களின் அதிகாரிகள் சகிதம் இன்று (28) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார்கள். 

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமையவும், பிரதமரின் ஆலோசனைக்கு அமையவும் நிலமெஹ்வர என்ற ஜனாதிபதி மக்கள் சேவை யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்தச் சேவை இன்று சாவகச்சேரி ரிபேர்க் கல்லூரியில் இடம்பெறும். 

சனிக்கிழமை சங்கானை இந்துக் கல்லூரியிலும், ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் மக்கள் சேவை ஏற்பாடாகியுள்ளது. 

திங்கட்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் நிலமெஹ்வர சேவைகள் இடம்பெறும். 

இந்த சேவை யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் வீட்டுக்கு வீடு சென்று பிரச்சினைகளை கேட்டறிந்தார்கள். 

சாவகச்சேரி, சங்கானை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment