சமகால நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

சமகால நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - பிரதமர்

சமகால நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைகள் சட்டம் முதலான ஏற்பாடுகள் மூலம் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புக்கள் தொடர்பான கொழும்பு பிரகடனத்திற்கு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் பிரதமர் உரையாற்றினார்.

மக்கள் போராடி வென்ற ஊடக சுதந்திரத்தை ஊடகங்கள் மாத்திரமே இல்லாதொழிக்கலாமென்றும் பிரதர் குறிப்பிட்டதுடன். கொழும்பு பிரகடனத்தை ஏற்படுத்த தாம் போராடியதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் அர்ப்பணிப்புடன் உதவியதாகவும் பிரதமர் கூறினார். 

நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைகள் சட்டம் முதலான ஏற்பாடுகள் மூலம் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தவிர அரசியல யாப்பின் மீதான 19வது திருத்தத்தின் மூலம் நீதி பொலிஸ் பொதுச் சேவைகள் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இது சுதந்திரத்தை வலுப்படுத்தியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்கள் வாயிலாக குறைபாடுகளை மாத்திரமன்றி அரசாங்கம் நிறைவேற்றிய நற்பணிகள் பற்றி பேசுவது அவசியமாகும். வீடமைப்புஇ நெடுஞ்சாலைகள் நிர்மாணம்இ கல்வி - சுகாதாரத் துறைகளில் அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகள் பற்றி ஊடகங்களில் போதியளவு பேசப்படுவதில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment