அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (29) சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு மத்தியிலும் இப் போராட்டம் நடைபெற்றது.

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்க் கோரி சிறையிலையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கைதிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல தரப்பினர்களும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். 

இதனடிப்படையிலையே அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து வெகுஜன அமைப்புக்களாக யாழிலும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

பிரதீபன்

No comments:

Post a Comment