05ம் தர புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் புலமைப் பரிசில் தொகையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
தற்போது 05ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 15,000 என்பதுடன், அவர்களுக்கு மாதாந்த 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக கல்வியமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே கற்கும் ஆவலை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக புலமைப் பரிசில் வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கும், புலமைப் பரிசில் தொகையை அதிகரிப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி சம்பந்தமாக ஊடகங்களை தௌிவூட்டும் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment