திருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கண்டி வீதியில் நேற்று (27) போக்குவரத்து பொலிஸார் வீதிச் சோதனையின் போது, கார் ஒன்றிலிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 469 ஐ கைப்பற்றியுள்ளதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
போலி நாணயத்தாள்களுடன் பயணம் செய்த மூவரையும் தாம் கைது செய்ததாகவும் தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குறுன, மாத்தளை மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே, கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு போலி நாணயத்தாள்களை மாற்றும் நோக்குடன் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றிய போலி நாணயத்தாளையும் கந்தளாய் நீதிமன்றத்தில் இன்று (28) ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் தம்பலகமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment