சிகிரியா மலைக்குன்று பகுதியில் கேபிள் கார் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தாம் எந்தவித யோசனையையோ அல்லது திட்டத்தையோ சமர்ப்பிக்கவில்லை என யுனெஸ்கோ அமைப்பிற்கான இலங்கைத் தலைவர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷ உள்ளதால் கேபிள் கார் விவகாரத்தில் அவரே தீர்மானங்களை எடுப்பார் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார் .
சிகிரியா மலைக்குன்று சார்ந்த பகுதியில் கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சீனாவின் குழுவொன்று ஆராய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்துவார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள மரபுரிமை ஸ்தலங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் விதத்திலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment