மஹிந்த அணியின் கோரிக்கை கேலிக்கூத்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

மஹிந்த அணியின் கோரிக்கை கேலிக்கூத்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிரணியில் உள்ள ஐ.ம.சு.முவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமாயின் அது எதிர்காலத்துக்குப் பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று (07) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்ததால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தமக்கு வழங்குமாறு கோர முடியாது. 

அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கை கேலிக்கூத்தாகும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்குமாறு கோருவது அடிப்படைப் பிரச்சினையாகும்.

பாராளுமன்றத்தில் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளே இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐ.ம.சு.மு, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி, ஈ.பி.டி.பி மற்றும் லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

ஐ.தே.கவும் ஐ.ம.சு.முவும் இணைந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் எதிர்க்கட்சியில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சி என்ற ரீதியில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

எமக்கிடையில் கலந்துரையாடி ஜே.வி.பிக்கு எதிர்க்கட்சி கெரடா பதவியை வழங்கியுள்ளோம். எனவே நாமே உண்மையான எதிர்க்கட்சி என்றார்.

மஹிந்த ஆதரவு அணியினரின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமாயின், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சியொன்று தனது உறுப்பினர்கள் சிலரை எதிர்க்கட்சியில் அமரச்செய்து எதிர்க்கட்சிப் பதவியையும் கைப்பற்ற முடியும்.

இது எதிர்காலத்துக்கு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதற்கு சபாநாயகர் இடமளிக்கக் கூடாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment