விமானப்படையின் முன்னாள் விமானி ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

விமானப்படையின் முன்னாள் விமானி ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது

இலங்கை விமானப் படையின் முன்னாள் விமானி ஒருவர் டுபாய் நோக்கி பயணிப்பதற்காக துப்பாக்கி ஒன்றுடன் விமான நிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (06) காலை 9.55 மணியளவில் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த EK-651 என்ற விமானத்தில் கடைசி பரிசோதனை செய்த போதே குறித்த நபர் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ராஜகிரிய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 1995 ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையில் இருந்து விலகிச் சென்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தற்போது கென்யாவின் உள்நாட்டு விமான சேவையில் கடமையாற்றி வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment