பாராளுமன்ற உறுப்பினர் விமலின் வழக்கு நவம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

பாராளுமன்ற உறுப்பினர் விமலின் வழக்கு நவம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கு தொடர்பான கணினி ஆதாரங்கள் இதுவரை பிரதிவாதிகளால் பரிசீலனை செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. 

அதனடிப்படையில் கணினி ஆதாரங்களை பரிசீலனை செய்ய இறுதி திகதியை வழங்கியுள்ளதுடன் வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

2010 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment