அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
குறித்த வங்கியில் சுமார் 09 கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நேற்று (2) பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளதுடன், மேலும் 08 குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
78 மில்லியன் பெறுமதியுடைய 22 கிலோவும் 806 கிராம் நிறையுடைய தங்க நகைகளும் மற்றும் 17 மில்லியன் ரூபா பணமும் குறித்த அரச வங்கியில் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான முன்னரான செய்தியினை பார்வையிட
http://www.newsview.lk/2018/07/95.html
No comments:
Post a Comment