ஒரு தொகை கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் வந்த மற்றுமொரு பிரேசில் நாட்டவரை இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
24 வயதுடைய பிரேசில் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் பிரேசிலில் இருந்து டோஹாவிற்கு வந்து, அங்கிருந்து இன்று காலை 10.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமானே QR 664 என்ற விமானத்தில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
குறித்த நபர் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான 100 கொக்கைன் வில்லைகளை விழுங்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பிலும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்திருந்தமையால் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பெருள் தடுப்புப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment