சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (2) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது, சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் சைட்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment