தடைகளைத் தாண்டி ஏறாவூர் பொதுச் சந்தையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிக்கான நிதி ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

தடைகளைத் தாண்டி ஏறாவூர் பொதுச் சந்தையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிக்கான நிதி ஒதுக்கீடு

ஏறாவூர் பொதுச் சந்தை அமைந்துள்ள காணியைப் பொறுத்தமட்டில் இரண்டு பள்ளிவாயல்களுக்கான உரிமை காணப்பட்டதுடன் ஏறாவூர் நகர சபை இரு பள்ளிவாயலுக்கும் வாடகைப் பணத்தின் மீதி செலுத்த வேண்டியதாகவும் இருந்தது. இதனால் ஏறாவூர் பொது சந்தையின் புனரமைப்பு என்பதனை எண்ணி பார்க்க முடியாத விடயமாக கால் நூற்றாண்டு காலமாக காணப்பட்டது. 

இவ்வாறான பல்வேறு நிருவாக சிக்கல் நிறைந்து காணப்பட்ட காலப்பகுதியில் சொல்லை செயலாக்கி சேவையை செவ்வனே செய்யும் ஆற்றல் மிக்க தலைமையான செய்லாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் வசம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றது. 
இது கிழக்கு மாகாணம் செழிக்க வழிசமைத்ததுடன் ஏறாவூர் மண்ணும் எண்ணில் அடங்காத சேவைகளை பெற்றுக் கொண்டது அதில் மிக பெறுமதி மிக்க அபிவிருத்தியாக ஏறாவூரின் பொதுச் சந்தை காணப்படுகின்றது. பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்காக கால் நூற்றாண்டு காணப்பட்ட நிருவாக சிக்கல்களுக்கு இரண்டரை மாதத்தில் தீர்வு வழங்கப்பட்டது என்பது முன்னாள் முதல்வரின் ஆளுமையை ஏறாவூர் மக்கள், பொதுச் சந்தை வியாபாரிகள், பள்ளிவாயல் நிருவாகம் என்பனே வியந்து நோக்கியதனை ஆரம்ப நிகழ்வில் வெளிப்படுத்தியும் இருந்தனர்.

கிழக்கை ஆட்சி புரிந்த செயல் வீரன் ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களினால் 125 மில்லியன் ரூபாய்களுக்கான திட்டவரைவு மேற்கொள்ளப்பட்டு நகரதிட்டமிடல் நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிப்பு செய்தார்கள்.
அதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் 66.19மில்லியன் ஒதுக்கீட்டை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கியது கட்டுமான பணிகளை அரச எந்திரவியல் கூட்டுத்தாபனம் முன்னெடுத்து வந்தது கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு பாரிய சவாலாக இருந்து வந்தது.

தனது அதிகாரம் முடிவடைந்த போதிலும் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை தொடர முன்னாள் முதல்வர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இன்று 40 மில்லியன் ரூபாய் நிதியை பெற்று பொதுச் சந்தையின் வேலை மீண்டும் தொடர்வதற்கும் இவ்வருடத்துக்குள் மிகுதியாக இருக்கும் வேலைகளை பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக 50மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் ஏறாவூர் நகர சபையின் கௌரவ தவிசாளர் IA.வாஸித் அலி, ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான MSM.சரூஜ், S.M.ஜெமில் ஆகியோர் வெள்ளிக்கிழமை (29) பொதுச்சந்தையின் கட்டுமானப்பணிகளை பார்வையிடச் சென்று இருந்தனர்.

இதனை அறிந்துகொண்ட பொதுச் சந்தை வியாபாரிகளும் அவ்விடத்தில் வருகைதந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அத்தோடு கட்டிட திணைக்கள பிரதான பொறியலாளருடன் தொலைபேசியில் உரையாடி பொதுச்சந்தை கட்டிட நிர்மானபணிகளுக்கு 40மில்லியன் ரூபா முன்னாள் முதலமைச்சரின் முயற்சியினால் நகரதிட்டமிடல் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வியாபாரிகளுக்கு தெரிவித்தார்.
கட்டிட வேலையை முன்னெடுத்து செல்கின்ற அரச கூட்டுத்தாபன பொறியலாளர்களையும் சந்தித்து கட்டுமானப்பணிகளை துரித படுத்துமாறு வேண்டியதனையும் ஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரியப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சந்தை கட்டிட பணிக்காக நிதி ஒதுக்கீடு மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும், சந்தையின் சரித்திர நாயகன் முன்னாள் முதலமைச்சர் ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கும் பக்கபலமாக செயற்பட்டுக் கொண்டிருகின்ற ஏறாவூர் நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பொது சந்தை வியாபாரிகள் தங்களது பராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment