நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மறுத்தார் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மறுத்தார் மஹிந்த

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சைனா ஹாபர் கம்பனியிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மறுத்துள்ளார்.

இது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் கட்டுரையானது எந்தவித அடிப்படையும் அற்றது என்றும், அரசாங்கத்தின் விசாரணைகளிலிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டே நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறித்த கட்டுரையை வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது" என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு சைனா ஹாபர் கம்பனி நிதியுதவி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்துக்குப் பெற்றுக் கொண்ட காசோலைகளை யார் வழங்கினார்கள், யார் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறித்த தகவல்களை கட்டுரையாளர் வேண்டும் என்றே தெளிவற்ற வகையில் குறிப்பிட்டுள்ளார். 

அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் இது எழுதப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்களுக்கு சைனா ஹாபர் கம்பனி பணம் வழங்கியிருந்தால் துறைமுக நகரத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை நல்லாட்சி அரசாங்கம் ஏன் மீண்டும் அதே கம்பனிக்கு வழங்கியது.

அரசாங்கத்தின் விசாரணைகளிலிருந்தே சில தகவல்களைப் பெற்றுக் கொண்டதாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து எதிரணியினர் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்தது என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment