ரஜரட்ட பல்கலைக்கழகம் எதிர்வரும் ஆறாம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக ரஜரட்ட பல்கலைகழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்த்தன தெரிவிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
மிஹிந்தலை வளாகத்திலுள்ள சகல பீடங்களும் எதிர்வரும் ஆறாம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. கற்றல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளன.
பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 21 மாணவர்களின் வகுப்புத் தடை தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம் கடந்த மாதம் 22ம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment