முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு

2017ம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் இதன் வேறுபாடுகளைக் காண முடியும் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றை திறைசேரி நிராகரித்துள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிக்கை விடுத்து இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விடயங்களை திரிவுபடுத்தியுள்ளார். அடிப்படையில் உண்மையான விடயங்களை மறைக்க முயற்சித்துள்ளார்.

கப்ரால் 2017ம் ஆண்டுக்கு எனக் கூறி கடன் மற்றும் மொத்த உற்பத்திக்கு இடையில் 3 சதவீத வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். 2010 தொடக்கம் 2013ற்கு இடையில் அக்காலப்பகுதியில் நிதியமைச்சரின் முன்மொழிவுகள் மற்றும் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானங்களுக்கு அமைவாக, முக்கிய அரச தொழில்துறைகள் பல பெற்றுக் கொண்ட கடன்கள், அப்போதைய அரச நிதி அறிவிப்பில் உள்ளடக்கப்படவில்லை. 

இதற்கமைவாக, முன்னைய அரசாங்கக் காலப்பகுதியில், புத்தளம் அனல்மின் நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மத்தள விமான நிலையம் போன்ற திட்டங்களுக்காக பெற்ற கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளன. இந்தக் கடன்கள் மத்திய அரசாங்கத்தின் நிதி அறிவிப்பில் நீக்கப்பட்டு இலங்கை மின்சார சபைக்கும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், விமான நிலையத்திற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்குமாக உட்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு செய்யப்பட்ட இந்தக் கடன்கள், சம்பந்தப்பட்ட அரச தொழில்துறை ஊடாக மீண்டும் செலுத்த முடியும் என்ற தவறான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்து. அரசாங்கம் பெற்றுக் கொண்ட இந்தத் தீர்மானத்தின் முன்னிலையில், அன்று மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் பணியாற்றிய கப்ரால், இன்று அரச தொழில்துறையில் நிலவும் கடன் அரசாங்கத்தின் நிதி அறிவிப்பிற்குள் உள்வாங்கப்படாமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ளாது கடன் மற்றும் மொத்த உற்பத்திக்கு இடையிலான வித்தியாசங்களை திரிவுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சித்துள்ளார்.

இது கவலைக்குரிய விடயமாகும் என்றும் திறைசேரி தெரிவித்துள்ளது. திறைசேரி கடன் மற்றும் தேசிய உற்பத்தி விகிதங்கள் தொடர்பிலோ, 2018ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டி இருந்த பாரிய கடன் சுமையை மறைப்பதற்கு எதுவும் இல்லை. வரலாற்றிலேயே இதுவரையில் பதிவான ஆகக்கூடிய கடன் தொகை 2.4 ட்ரில்லியன் ரூபாவாகும். இதனை நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகையில் 77 சதவீதம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட காலங்கடந்த கடன் தொகைக்கு ஏற்ப செலுத்த வேண்டியதாகும். மொத்த உற்பத்தி மற்றும் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு விகிதங்களை கணிப்பீடு செய்வதில் திறைசேரி, தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. 

இதனால் கப்ராலின் கணக்கீடு மிகவும் பொருத்தமற்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு அவசியமில்லை என்று திறைசேரி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கடன் தொடர்பிலான தரவுகள் குறித்து நம்பிக்கையுடன் கருத்து வெளியிடுவதற்கு அன்று நாட்டின் பொருளாதாரம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட கடன் முகாமைத்துவ முறை சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நிதியை ஒன்றிணைக்கும் பொழுது நம்பிக்கையான கட்டமைப்பின் ஊடாக மத்திய கால கட்டமைப்பிற்குள் அரசாங்கம் கடனை ஒன்றிணைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது. அரசாங்கத்தின் நிதி ஒன்றிணைப்புத் திட்டத்தை அடையாளம் கண்டுள்ள சர்வதேச நிதி மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த நாட்டின் மத்திய கால கடன் மற்றும் தேசிய உற்பத்திக்கு இடையிலான விகிதங்களை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment