ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமாயின் இலங்கை பத்திரிகையாளர்களை அச்சுறுத்தாது நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியரை தொடர்புகொள்ளுமாறு அந்த பத்திரிகையின் சர்வதேச செய்திப்பிரிவு ஆசிரியர் மைக்கல் சிலக்மன் இன்று (3) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக அறிக்கை த நியூயோர்க் ரைம்ஸ் என்ற பத்திரிகை கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிக்கை பின்வருமாறு.
ஜுலை 3 2018
ஊடக அறிக்கை : இலங்கை பத்திரிகையாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் பிரச்சாரம்
த நியூயோர்க் ரைம்ஸ், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டு மற்றும் சரியான ஆய்வுகளுடன் புலனாய்வு செய்து கடந்த 26ஆம் திகதி ஒரு செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இரண்டு பத்திரிகையாளர்களை விமர்சிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர் குழு பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த முயற்சி இலங்கையில் விமர்சனங்களை மேற்கொள்ளும் ஊடக சுதந்திரத்தை சீர்குலைப்பதுடன் பொதுமக்களுக்கு பாதகமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை இலங்கையருக்கு உள்ள உரிமையை இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே தெரிகின்றது .
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இந்த செய்திக்கு இரண்டு ஊடகவியலாளர்கள் உதவியுள்ளனர். இது தொடர்பாக இந்த செய்தியாளர்களுக்கு எதிராக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த செய்தியாளர்கள் தொடர்பில் பகிரங்கமாக விமர்சித்திருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் இத்தகைய உண்மையான விடயங்களை மூடிமறைப்பதற்கும் பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மக்களின் பொதுநலன்களுக்கான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிதையை இல்லாது ஒழிப்பற்கே இறுதியில் வழிவகுக்கும்.
இலங்கை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு நிறுவனத்துடனும் சுதந்திரமாக செயற்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்வார்கள் என்று த ரைம்ஸ் எதிர்பார்க்கிறது.
த ரைம்ஸ் செய்தி தொடர்பில் திரு.ராஜபக்ஷ அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமாயின் த நியூயோர்க் ரைம்ஸ் சிரேஷ்ட ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை பத்திரிகையாளர்களை மிரட்டுவதற்கு பதிலாக த நியூயோர்க் ரைம்ஸ் உடன் தொடர்புகொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையுள்ள
மைக்கல் சிலக்மன்
சர்வதேச செய்தி பிரிவுகளுக்கான ஆசிரியர்
த நியூயோர்க் ரைம்ஸ்
த நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தியினை பார்வையிட
http://www.newsview.lk/2018/06/448.html
http://www.newsview.lk/2018/06/7_26.html
No comments:
Post a Comment