இலங்கையில் 2 இலட்சம் பேர் சமுர்த்தி உதவி திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது சமுர்த்தி பயனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் அவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் வழங்கி வைத்துள்ளார்.
இந்த சந்திப்பில் கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கே.குணரட்னம் உட்பட திணைக்கள பணிப்பாளர்கள், அமைச்சின் செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment