இன்றைய நிலையில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (2) இன்றைய தினம்திங்கட்கிழமை “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக்கள் சேவை என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர்களான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்ஜே.சீ.அளவதுவள ஆகியோர் முன்னிலையிலேயே மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவணை, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
உத்தியோகபூர்வ பணிகளுக்கு எந்தவித ஆதரவையும் வழங்க முடியாத நிலையில் யாழ் மாவட்ட மக்களான நாங்கள் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை இந்தநிகழ்வில் கதாநாயகன்களாக அமர்ந்துகொண்டிருக்கும் அமைச்சர்கள் இருவரிடமும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
எங்களுடைய ஆறு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறான கொடூரங்களை தடுக்க முடியாத எமக்கு எதற்காக உத்தியோபூர்வ பணி நடமாடும் சேவை எங்களுக்கு என்றும் கேல்வி எழுப்பினார்.
நாங்கள் ஜனாதிபதியை தலையால் நடந்து ஜனாதிபதி ஆக்கினோம். ஆனால் அவர் இன்று கட்சியை வளர்க்கின்றாரே அன்றி எமது மக்களை காப்பற்றுகின்றார் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை இப்போது ஒவ்வொரு வரும் உணர்கின்றோம்.
நாங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment